இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசிக்கு 8வது மற்றும் 11வது ஸ்தான அதிபதியாக குரு வருகிறார். 8வது ஸ்தானம் என்பது ஓரு துர் ஸ்தானமாகும். 8வது ஸ்தானம் என்பது பல கஷ்டங்கள், நோய்கள், விபத்துகள், நட்டம் அடைதல் ஆகியவற்றை குறிக்கும். 11வது ஸ்தானம் என்பது லாப ஸ்தானம் என்று அழைக்கப்படும். 11வது ஸ்தானம் மூத்த சகோதர உறவினையும், இரண்டாவது மனைவி அல்லது கணவன் உறவினையும் மற்றும் தொழில் உள்ள லாபத்தினையும் குறிக்கும். குருவானவர் ரிஷப ராசியின் அதிபரான சுக்கிரனை பகையாக நினைப்பவர். 8வது இடம் மாரக ஸ்தானம் ஆகும். ஆகவே குரு ரிஷப ராசிக்கு கடுமையான பாபியகிறார்.ஆக குரு நிற்கும் ஸ்தானம் நல்ல ஸ்தானமாக இருந்தால் மட்டுமே அவரால் தொல்லைகள் உண்டாகாது. மாறாக குரு துர் ஸ்தானத்தில் அமர்ந்தால் கொடிய பலனை விளைவிக்க குடியவர். மிதுன ராசி என்பது ரிஷப ராசிக்கு 2வது இடம் ஆகும். இது நல்ல இடமும் ...